வரலட்சுமி நோன்பு நாளான இன்று! இந்த 3 புனிதப் பொருட்களின் அற்புத பலன்கள்! இப்படி தாயாருக்கு படைத்தால் செல்வ வளம், ஆனந்தத்தையும் பெறலாம்!



varalakshmi-nombu-auspicious-items-benefits

வரலட்சுமி நோன்பு நாள், மகாலட்சுமி தாயாரின் அருளைப் பெறுவதற்கான மிகச் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் வாங்கி வைக்கும் சில புனிதப் பொருட்கள் செல்வ வளத்தையும் ஆனந்தத்தையும் தரும் என நம்பப்படுகிறது.

நெல்லிக்கனியின் சிறப்பு

நல்ல தரமான பெரிய நெல்லிக்கனி வாங்கி, பூஜையறையில் தாயார் படத்திற்கு முன் வைத்து வணங்க வேண்டும். புராணக் கதைகளின்படி, குபேரருக்கு வறுமை ஏற்பட்டபோது நெல்லி மரத்தை வளர்த்து வழிபடுமாறு உபதேசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், நெல்லிக்கனி மகாலட்சுமி தாயாருக்கும் குபேரருக்கும் உகந்ததாகக் கருதப்படுகிறது. வரலட்சுமி நோன்பு வெள்ளிக்கிழமையன்று இதை வாங்கி படைப்பது மிகுந்த பலனை அளிக்கும்.

கல் உப்பின் நன்மை

வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் கல் உப்பு வாங்குவது வீட்டில் செல்வக் கடகத்தை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. அதனால், இந்த நாளில் கல் உப்பை வாங்கி வைப்பது தவறாத வழக்கம்.

இதையும் படிங்க: நாளை.. வெள்ளிக்கிழமை.. பணமழை கொட்ட வேண்டுமா? இதை செய்தால் போதும்.!

மஞ்சள் ரவிக்கையின் முக்கியத்துவம்

மஞ்சள் நிற ரவிக்கை துணி அல்லது துண்டுடன், குண்டு மஞ்சள் கிழங்கை வாங்கி, மகாலட்சுமி தாயாரின் முன் வைத்து வணங்க வேண்டும். பின்னர், இதை சுமங்கலி பெண்களுக்கு கொடுத்தால், கலசம் வைத்து வழிபட்டதற்கான முழு பலனையும் பெற முடியும் என கூறப்படுகிறது.

வரலட்சுமி நோன்பு அன்று கலசம் வைத்து வழிபடுபவர்கள் தங்கள் முறைப்படி இந்த மூன்று பொருட்களையும் வைத்து வழிபடலாம். வழிபாடு செய்ய முடியாதவர்களும், குறைந்தபட்சம் இந்த பொருட்களை வாங்கி வணங்கி, குபேர சம்பத்துடன் செழிப்பான வாழ்வு நடத்தலாம்.

 

இதையும் படிங்க: முக்கிய பதிவு : பெண்கள் பழைய தாலி கயிறை மாற்ற சரியான நேரம் எது? எங்கு மாற்றனும் தெரியுமா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.....