தமிழகம் இந்தியா லைப் ஸ்டைல்

ரயில் பயணிகளுக்கு இன்பமான செய்தி! இனி நீங்கள் இதை நினைத்து கவலைப்பட தேவை இல்லை!

Summary:

Train current status and updates through whatsapp

இன்று நமது வாழ்க்கை பெரும்பாலும் மொபைலில் உள்ள வாட்ஸ்-ஆப் போன்ற செயலிகளிலே அடங்கிவிடுகிறது. இதனால் பல தீய விசயங்கள் பரவினாலும் இந்த மாதிரியான செயலிகளை ஆக்கப்பூர்வமாக சிலர் பயன்படுத்தி வருகின்றனர். 

நமது ரயில்வேயும் இந்த வாட்ஸ்-ஆப் மூலம் ஒரு புதிய வசதியை அறிமகப்படுத்தியுள்ளது. நீங்கள் பயணிக்க இருக்கும் அல்லது ஒரு ரயில் எங்கு வந்துகொண்டிருக்கின்றது என்ற நேரடி நிலவரத்தையும் தற்போது மெசேஜ்களுக்கு பதிலாக வாட்ஸ் அப்-லேயே பெறக்கூடிய புது வசதியை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

Step 1: முதலில் 7349389104 என்ற இந்த நம்பரை உங்கள் மொபைலில் சேவ் செய்ய வேண்டும் .

Step 2: உங்கள் வாட்ஸ்-அப்-ஐ திறக்கவும்.

Step 3: வாட்ஸ்-அப்பில் நீங்கள் சேமித்து வைத்துள்ள 7349389104 எண்ணிற்கு நீங்கள் நேரடி நிலை பெற விரும்பும் ரயிலின் நம்பரை அனுப்பவும்.

Step 4: அடுத்த இரண்டு, மூன்று நொடிகளில் உங்கள் வாட்ஸ்-அப்பிற்கு நீங்கள் அறிய விரும்பிய ரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது. அடுத்து எந்த ரயில் நிலையத்திற்கு செல்ல உள்ளது. எத்தனை நிமிடங்களில் சென்றடையும் என்ற அனைத்து தகவல்கள் அடங்கிய ரயிலின் நேரடி நிலையை உங்கள் மொபைலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

பயணிகள் முன்பு போல் 139-க்கு அழைக்கத் தேவையில்லை என்றும், நீங்கள் செல்லவிருக்கும் குறிப்பிட்ட ரயில் இப்போது எந்த ஸ்டேஷன் பக்கத்தில் வந்துக் கொண்டிருக்கிறது போன்ற தகவல்களை வாட்ஸ் அப்பிலேயே பெற்றிட முடியும் எனவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.


Advertisement