BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலை... ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா.? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் காரணமாக சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும் பங்குசந்தைகள் தொடர் சரிவை சந்தித்து வருவதால் பல முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர்.
இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்படுகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.4,835-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.38,680-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. அதாவது ஒரு கிராம் வெள்ளி 50 காசு குறைந்து ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.65,000-க்கு விற்பனையாகிறது.