பியூட்டி பார்லர் தேவையில்லை..!! "இளமையாகவும் பளபளப்பாகவும் முகம் ஜொலிக்க.." சிம்பிளான பியூட்டி ட்ரிக்ஸ்.!

பியூட்டி பார்லர் தேவையில்லை..!! "இளமையாகவும் பளபளப்பாகவும் முகம் ஜொலிக்க.." சிம்பிளான பியூட்டி ட்ரிக்ஸ்.!



to-get-glowy-and-shinny-face-follow-these-simple-beauty

உங்கள் சருமம் மிளிர்வதற்காக, பார்லருக்கு சென்றும், விளம்பரங்களில் வருகின்ற விதவிதமான கிரீம்களை  வாங்கி பூசியும், உங்கள் பணத்தை விரயமாக்க தேவையில்லை. உங்களை சுற்றியுள்ள இயற்கை பொருட்களே அந்த வித்தையை செய்யக்கூடிய வல்லமையை பெற்றிருக்கிறது. பக்க விளைவுகள் இன்றி, உங்களை இளமையான தோற்றத்துடன் வைத்திருக்க, உங்கள் வீட்டில் இருந்தபடியே என்ன செய்யலாம் என்று பார்ப்போம்!

வெயிலினால் ஏற்படுகின்ற தோலின் கருமை, முகச் சுருக்கம், கருந்திட்டுகள் போன்றவற்றை சோற்றுக்கற்றாழை செய்கிறது. இது தோலின் எரிச்சலை போக்குவதோடு, துளைகளையும் மூடுகிறது. தேங்காய் எண்ணெய் நமக்கு மலிவு விலையில் கிடைக்கும் மாய்ஸ்சரைசர் ஆகும். சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். உதடுகள் உலர்ந்திருந்தால் நெய்யை தடவிக் கொள்ளலாம்.

beauty tipsபப்பாளியில் உள்ள சத்துக்கள் தோலில் உள்ள இறந்த செல்களை அகற்றவல்லது. தேன், முகத்தை ஈரப்பதத்துடன் வைப்பதுடன், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்கிறிருக்கிறது. ஆலிவ் எண்ணையில் அதிக அளவு ஆன்டிஆக்சிடென்ட்கள் இருப்பதால் இதனை பயன்படுத்தும் பொழுது சருமம் ஆரோக்கியமாக இருக்கும். மஞ்சள் நல்ல கிருமி நாசினியாகவும், தோல் அழற்சியை குறைக்கவும் உதவும். சென்சிட்டிவ் சிரமம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்பு கை வைத்திய முறைகளை பின்பற்ற வேண்டும்.

beauty tipsவெளிப்புறம் பயன்படுத்தும் பொருட்களை காட்டிலும், நீங்கள் உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் உங்கள் சரும ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும். மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். நாள் ஒன்றுக்கு குறைந்தது 3 லிட்டர் நீர் அருந்துங்கள். உடற்பயிற்சி செய்வது உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றி, உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவும். போதிய அளவு தூக்கமும் உங்கள் சரும ஆரோக்கியத்திற்கு முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள்!