உங்களுக்கு நிம்மதியாக தூக்கம் வேணுமா.?! இதை பண்ணுங்க போதும்.!

உங்களுக்கு நிம்மதியாக தூக்கம் வேணுமா.?! இதை பண்ணுங்க போதும்.!



tips-for-better-sleep

ஒரு மனிதனின் அன்றாட வேலைகளில் முக்கியமான ஒன்று உறக்கம். நல்ல தூக்கம் நம் உடலுக்கு தேவைப்படும் ஓய்வை கொடுத்து அடுத்த நாளுக்கான ஆற்றலை புதுப்பிக்கிறது. நமது மூளையின் செல்கள் சிறப்பாக இயங்குவதற்கு உதவுகிறது. நமது மனதை சாந்தப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கிறது. 

Sleep

படுத்தவுடன் தூங்குவதற்கான சில எளிய வழிமுறைகள் இதோ : 

முதலில் தூங்குவதற்கான நல்ல சூழலை உருவாக்க வேண்டும். அமைதியான, வெளிச்சம் அதிகம் இல்லாத இடங்களை தேர்ந்தெடுங்கள். 

அறையின் சீதோஷ்ண நிலையும் நல்ல உறக்கத்திற்கு உதவி புரியும். தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக மிதமான உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

Sleep

உறங்குவதற்கு முன் அதிக அளவில் நீர் போன்ற திரவங்களை அருந்த வேண்டாம். ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் உறங்குதல் அவசியம். இவற்றை கடைபிடித்தும், உறக்கம் தழுவ மறுத்தால் நல்ல மருத்துவரை அணுகி உங்களுக்கு தூக்கம் சம்மந்தமான உபாதைகள் எதுவும் உள்ளதா என்று சோதித்து கொள்வது அவசியம்.