தமிழகம் இந்தியா லைப் ஸ்டைல்

இன்று சந்திர கிரகணம்: யார் யாரெல்லாம் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் தெரியுமா?

Summary:

Things to be done after lunar eclipse

பொதுவாக சந்திர கிரகணத்தின் போது புவியிலும் சரி மனிதர்களின் உடலிலும் சரி ஒருசில மாற்றங்கள் நிகழும். இதனால் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கிரகணத்தின் போது வெளியில் வரக் கூடாது என்பார்கள். 

இந்நிலையில் இன்று ஜூலை 16 ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த கிரகணமானது இந்தியாவில் நள்ளிரவு 1.32 க்கு துவங்கி காலை 4.30 மணி வரை நீடிக்கிறது. 

இந்த சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஒருசிலர் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள், ரோகிணி, அஸ்தம், பூராடம், உத்திராடம், திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புத்தி உள்ளவர்கள் கிரகணம் முடிந்த பின் கடலில் அல்லது வீட்டிலேயே கல் உப்பு சேர்த்த நீரில் குளிக்க வேண்டும். ஜூலை 17 காலையில் கட்டாயம் கோயிலுக்கு செல்ல வேண்டும்.


Advertisement