அனைவருக்கும் பிடித்த அசத்தலான ரவா இட்லி.. வீட்டிலேயே நிமிடங்களில் செய்வது எப்படி?.! மிஸ் பண்ணிடாதீங்க .!tasty rava idly recipe

சுவையான ரவா இட்லி எப்படி செய்வது என்பது பற்றி தற்போது காண்போம்.

தேவையான பொருட்கள் :

தயிர் - கால் கப் 
கொத்தமல்லி - சிறிதளவு 
நெய் - ஒரு டேபிள் ஸ்பூன் 
ரவா - ஒரு கப் 
பெருங்காயத்தூள் - அரை டேபிள்ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
பேக்கிங் சோடா - கால் டேபிள்ஸ்பூன் 
கடுகு - அரை டேபிள்ஸ்பூன் 
கருவேப்பிலை - தேவைக்கேற்ப 
முந்திரி பருப்பு - 10 
பச்சை மிளகாய் - ௩ 
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன் 
இஞ்சி - 1 சிறிய துண்டு

செய்முறை :

★முதலில் இஞ்சி, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

★பின் ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும் கருவேப்பிலை, கடுகு சேர்த்து தாளித்த பின் முந்திரிபருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

★அடுத்து அதில் பொடியாக நறுக்கி வைத்த பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து கலவையை தனியாக எடுத்து வைக்கவும்.

★ஒரு வானலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் ரவா சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். 

★பின் தனியாக எடுத்துவைத்த கலவை மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்க்கவும். 

★அதனுடன் பேக்கிங் சோடா, பெருங்காயத்தூள், தயிர், உப்பு மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து 20 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். 

★இறுதியாக இட்லி தட்டில் மாலை ஊற்றி 10 முதல் 12 நிமிடங்கள் கழித்து வேகவைத்து எடுத்தால் சுவையான ரவா இட்லி தயாராகிவிடும்.