லைப் ஸ்டைல்

ராயல் என்ஃபீல்ட் பைக்கை இவ்வளவு சுலபமாக திருட முடியுமா! வைரலாகும் வீடியோ

Summary:

stealing royal enfeild bike video

ராயல் என்ஃபீல்டு பைக் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருந்து வருகிறது. ஒன்றரை லட்சம் வரை விலை போகும் இந்த பைக் பார்ப்பதற்கு கம்பீரமாகவும் ஸ்டைலாகவும் இருப்பதால் இளைஞர்கள் இதனை பெரிதும் விரும்புகின்றனர்.

ஆனால் இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் அந்த பைக்கின் லாக் மிகவும் மோசமாக தயாரிக்கப்படுகிறது. இந்த லாக்கை எளிமையாக உடைத்து வண்டியை திருடிச் செல்வதில் பலர் கை தேர்ந்தவர்களாக உள்ளனர். அப்படி பைக்கை திருடிய ஒரு இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த பைக்கை எப்படி திருடுவது என்று அந்த இளைஞரிடம் காவல்துறையினர் செய்துகாட்ட சொல்லியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவானது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் இளைஞர் மற்றொருவரின் துணையுடன் பைக்கின் லாக்கை மிகவும் சுலபமாக உடைத்து விடுகிறார். பின்பு பைக்கில் ஒரு ஒயரை மட்டும் துண்டித்துவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்யும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

இதனால் ராயல் என்ஃபீல்டு பைக் வைத்திருப்பவர்கள் தங்களது பைக்கிற்கு நல்ல லாக்கை தேர்வு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.


Advertisement