149 வருடத்திற்கு பிறகு நிகழும் அதிசய சந்திர கிரகணம்! முழு விவரம் உள்ளே!

149 வருடத்திற்கு பிறகு நிகழும் அதிசய சந்திர கிரகணம்! முழு விவரம் உள்ளே!


Special Luna eclipse after 149 years july 17

நாளை (ஜூலை 17) 149 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் பாதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. நள்ளிரவு சரியாக 12.13 மணியளவில் தொடங்கும் இந்த கிரகணம் சரியாக 1.31 மணிக்கு முழுமை அடையும். மேலும் அதிகாலை 4.29 மணிக்கு சந்திர கிரகணம் முழுவதும் முடிந்துவிடும். இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும்.

பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த நிகழ்வின்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுந்து சந்திரனை மறைப்பதையே சந்திரகிரகணம் என்கிறோம்.

lunar eclipse in tamil 2019

நாளை நடைபெறவுள்ள சந்திரகிரகணத்தின்போது பூமியின் நிழல் பகுதி அளவு மட்டுமே சந்திரனை மறைக்கும். அதாவது, சூரியனுக்கும் சந்திரனுக்கும் சரியான நேர்கோட்டில் பூமி வராமல் பாதி அளவு மட்டுமே நேர்கோட்டில் வரும். இதனாலயே இந்த பாதி சந்திர கிரகணம் நடக்கிறது.

இந்த சந்திரகிரகணம் 149 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நிலவும் அபூர்வ சந்திரகிரகணம் ஆகும். இதற்குப் பின் இந்தியாவில் 2021ஆம் ஆண்டுதான் அடுத்த முழுமையான கிரகணம் தோன்றும்.

கிரகணத்தின்போது குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் வெளியே வருவதை தடுக்கவும்.