இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த சுவையான சோயா பீன்ஸ் கூட்டு.. செய்வது எப்படி?..!

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த சுவையான சோயா பீன்ஸ் கூட்டு.. செய்வது எப்படி?..!


soya beans soup recipe for heart

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக சோயாபீன்ஸ் மிகவும் உதவுகிறது. மேலும், நீரிழிவு நோய் கட்டுப்படுத்த, உடல் எடையை குறைக்க மற்றும் இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக சோயா பீன்ஸ் உதவுகிறது. செரிமான சக்தியையும் அதிகரிக்கிறது. எலும்பு முறிவு ஏற்பட்ட ஒருவர் சோயாபீன்ஸ் உட்கொள்வதன் மூலம் விரைவில் குணமாக உதவுகிறது. 

தேவையான பொருட்கள் :

கொத்தமல்லி - சிறிதளவு
மிளகுத்தூள் -1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சோயா பீன்ஸ் - அரை கப்
தக்காளி -1
சிறிய வெங்காயம் -1 கைப்பிடி
உப்பு - தேவைக்கேற்ப
கேரட் - 1
பட்டை,பூண்டு - தேவைக்கேற்ப

soya beansசெய்முறை :

★முதலில் சோயாபீன்ஸ் எடுத்து தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

★பின் தக்காளி மற்றும் வெங்காயம், கொத்தமல்லி, கேரட் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.

★அடுத்து குக்கரில் பொடியாக நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்த்து தேவையான அளவு உப்பு, பூண்டு சேர்த்து தண்ணீர், பட்டை, கிராம்பு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

★பின் அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து குக்கரில் நன்றாக வேக வைக்க வேண்டும்.

★இவை அனைத்தும் நன்றாக வெந்தபின் அதனை மசித்து வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

★அத்துடன் போதுமான அளவு உப்பு சேர்த்து கொத்தமல்லி தழை தூவி, சூடாக பரிமாறலாம்.