எலும்புகளை பலப்படுத்தும் சோயா பீன்ஸ்.. வீட்டிலேயே சோயா பீன்ஸ் சூப் செய்வது எப்படி?.!

எலும்புகளை பலப்படுத்தும் சோயா பீன்ஸ்.. வீட்டிலேயே சோயா பீன்ஸ் சூப் செய்வது எப்படி?.!


soya-beans-repice-for-health

கால்சியம் சத்து நிறைந்த சோயாபீன்ஸ் சூப் எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றியது தான் இந்த செய்திக்குறிப்பு.

சோயா பீன்ஸில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால், எலும்புகளை பலப்படுத்துவதற்கு உதவுகிறது. அத்துடன் சோயாபீன்ஸ் சாப்பிடுவதன் மூலமாக உடல் உறுப்புகளை சுற்றி கொழுப்புகள் படிவதையும் தடுக்கிறது.

தேவையான பொருட்கள் :

மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகுத்தூள் - சிறிதளவு
சோயா பீன்ஸ் - 50 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
தக்காளி - சிறிதளவு
சிறிய வெங்காயம் - 1 கைப்பிடி
கொத்தமல்லி - சிறிதளவு
பட்டை - தேவைக்கேற்ப
கிராம்பு -2
பூண்டு - தேவைக்கு ஏற்ப

soya beans soup

செய்முறை :

★முதலில் சோயா பீன்ஸை தண்ணீரில் ஊறவைத்து, பின் தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்க வேண்டும்.

★அடுத்து குக்கரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வெங்காயம், பூண்டு, தக்காளி போன்றவற்றை போட வேண்டும்

★பின் மஞ்சள் தூள், மிளகுத்தூள், கிராம்பு, பட்டை ஆகியவற்றை கலந்து மிதமான தீயில் 2 விசில் வரும் வரை மூடி வைக்க வேண்டும்.அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து குக்கரில் வேக வைக்க வேண்டும்.

★தொடர்ந்து இவை அனைத்தும் வெந்தபின், நன்றாக மசித்து 30 மில்லி அளவு வரும் வரை தண்ணீரை வற்ற வைக்கவேண்டும்.

★இறுதியாக உப்பு சரியாக உள்ளதா?என்பதை பார்த்து, கொத்தமல்லி தழை தூவி, சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து இறக்கினால் சூப்பரான சோயாபீன்ஸ் சூப் தயாராகிவிடும்.