புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
எலும்புகளை வலுப்படுத்த சௌசௌ சட்னி.. வீட்டில் செய்வது எப்படி..!
கால்சியம் சத்துக்கள் அதிகரிக்க சுவையான சௌசௌ சட்னி எவ்வாறு தயாரிப்பது என்பதனை பற்றி தற்போது காண்போம்.
சௌசௌவில் கால்சியம் சத்துகள் அதிகமாக காணப்படுவதால் எலும்புகளை வலுப்பெற உதவுகிறது. அத்துடன் சௌசௌ உட்கொள்வதன் மூலமாக கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறது.
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பட்டை மிளகாய் - 3
துருவிய தேங்காய் - 3 தேக்கரண்டி
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
பொட்டுக்கடலை - கால் கப்
சின்ன வெங்காயம் - 20
சௌசௌ - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
★முதலில் சௌசௌவை தோல் நீக்கி, பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
★பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
★அடுத்து சௌசௌ நன்றாக வதங்கியதும், பொட்டுக்கடலை சேர்த்து கிளற வேண்டும்.
★பின் இதனுடன் துருவிய தேங்காய் மற்றும் புளி சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து ஆற வைக்க வேண்டும்.
★இறுதியாக மிக்ஸியில் ஆறிய அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்தால் சுவையான சௌசௌ சட்னி நிமிடத்தில் தயாராகிவிடும்.