லைப் ஸ்டைல்

இன்று கட்டாயம் கணவன் மனைவி இருவரும் தாம்பத்திய உறவை தவிர்ப்பது நல்லது..! கர்ப்பிணிகளும் கவனம் தேவை..! ஏன் தெரியுமா.?

Summary:

Solar eclipse june 21 2020 what should do and dont do

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நடந்து வருகிறது. மிகவும் அரிய வானியல் நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் இந்திய நேரப்படி காலை 10:22 நிமிடத்திற்கு தொடங்கி மாலை 1:44 நிமிடம் வரை நிகழவுள்ளது.

கிரகணத்தின் போது அனைத்து கோவில்களிலும் நடை சாத்தப்படுவது வழக்கமான ஒன்று. அதேபோல் கிரகணம் முடிந்த பிறகு கோவில்களை சுத்தம் செய்து பூஜை செய்வதும் வழக்கம்.

கிரகணத்தின் போது வெளியே சுற்றுவது, உணவு அருந்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இந்த சமயத்தில் நமது உடலில் உள்ள செரிமான உறுப்புகள் சரிவர இயங்காது என்பதால் உணவு உண்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

அதேபோல், கிரகணம் முடிந்த பிறகு வீட்டை சுத்தம் செய்து அனைவரும் குளிப்பது மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக கிரகணத்தின்போது கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

மேலும், புதிதாக திருமணம் முடிந்தவர்கள், குழந்தைக்காக காத்திருக்கும் தம்பதியினர் கிரகணத்தின்போது தாம்பத்திய உறவில் ஈடுபடுவதை கட்டாயம் தவிர்க்கவேண்டும். இந்த நேரத்தில் உறவில் ஈடுபட்டு குழந்தை உருவாகும் பட்சத்தில் குழந்தை பல்வேறு குறைகளுடன் பிறக்க வாய்ப்பு உள்ளது.


Advertisement