தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
"தினமும் மேகி சாப்பிடுபவரா நீங்கள்?!" அப்போ இதைப் படிங்க!
இந்த அவசர காலத்தில் அனைவரும் காலில் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்கிறார்கள். எனவே எளிதில் சமைக்க கூடிய உணவையே பெரும்பாலும் வேலை நாட்களில் சமைக்க விரும்புவார்கள். அப்படி ஒரு எளிதில் சமைக்க கூடிய உணவு தான் "மேகி".
இந்த மேகியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலை, மாலை என இரண்டு வேளையும் விரும்பி உண்பார்கள். இரண்டு நிமிடத்தில் சமைக்க கூடிய உணவு என்பதால், பெரும்பாலான நாட்களில் இதையே உண்டு வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் உணவுக்கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் எடை கூடும் என்ற பயத்தில் மேகியை தவிர்ப்பார்கள். உண்மையில் இந்த மேகி நம் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல. இதில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், தாதுக்கள் என்று எந்த சத்துக்களும் இல்லை.
மேலும் இது நீண்ட காலம் கெடாமல் இருக்கவும், அதன் சுவையை அதிகரிக்கவும் ஏராளமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும் இதில் கொழுப்பு மற்றும் உப்பு, கார்போஹைட்ரேட் தான் அதிகளவில் உள்ளன. எனவே அதிகளவில் மேகி உண்பதால் உடல் எடை கூட தான் செய்யும்.