இந்த தவறுகளை செய்தால் சனி பகவானை கோபப்படுத்துவதாகுமாம்! இனி வீட்டில் இதை செய்யாதீங்க....



shani-dosha-vastu-mistakes

வீடு கட்டும் போது வாஸ்து சாஸ்த்திரம் கடைபிடிப்பது வாழ்க்கையில் அமைதியும் வளமும் பெற உதவுகிறது. இல்லையெனில் சனி பகவானின் கோபம் பல்வேறு தடைகளையும் சிரமங்களையும் உண்டாக்கும் என்று நம்பப்படுகிறது.

சனி பகவானின் நீதிமான தன்மை

ஜோதிடக் கணிப்பின்படி, சனி பகவான் ஒரு நீதிமான். அவர் மனிதர்களின் கர்மவினைகளை அடிப்படையாகக் கொண்டு பலனை வழங்குபவர். ஆனால் வீடு கட்டும் போது சிறிய தவறுகளும் அவரை கோபப்படுத்தக்கூடும்.

மேற்கு திசையில் தவிர்க்க வேண்டியவை

வீடு கட்டும் பொழுது மேற்கு திசையில் சமையலறை வைப்பது தவறு. இதனால் உணவு குறைபாடு, உடல்நல பிரச்சினைகள், நிதி சிக்கல்கள் ஏற்படும். சமையலறை எப்போதும் தென்கிழக்கு அக்னி மூலையில் அமைந்தால் நல்லது.

இதையும் படிங்க: வீட்டில் அடிக்கடி சண்டையா? மனஅமைதியை பெற்று உங்கள் வாழ்க்கையில் சந்தோசம் பொங்கணுமா ! அப்போ இதெல்லாம் பண்ணுங்க.....

மேற்கு திசையில் கோயில், பூஜை அறை, குளியலறை அல்லது பெரிய பால்கனி அமைத்தாலும் பிரச்சினைகள் அதிகரிக்கும். தண்ணீர் தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டால் அதன் எதிர்மறை விளைவுகள் குடும்பத்தை பாதிக்கும்.

மரச்சாமான்களின் அமைப்பு

மேற்கு திசையில் மரச்சாமான்களை வைத்தால் அவை எப்போதும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருக்க வேண்டும். உடைந்த பொருட்கள் அல்லது குப்பைகள் அங்கு இருந்தால் வீட்டின் நேர்மறை ஆற்றல் குறையும்.

சனி பகவானின் அருளைப் பெறுவது எப்படி?

சனி பகவானின் அருளை பெற விரும்பினால் மேற்கு திசையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க வேண்டுமானால் இந்த விதிகளை பின்பற்றுவது அவசியம்.

இவ்வாறு வீடு கட்டும் போது சனி பகவான் கோபம் கொள்ளாத வகையில் வாஸ்து விதிகளை கடைபிடிப்பது, வாழ்க்கையில் அமைதியும் முன்னேற்றமும் தரும் முக்கியமான வழியாகும்.

 

இதையும் படிங்க: அதிர்ஷ்டத்தையும் நேர்மறை ஆற்றலையும் பெற வீட்டிற்கு வெளியே எந்த திசையில் விளக்கேற்றனும் தெரியுமா? அதுவும் இந்த எண்ணெய்யில் தான் விளக்கு ஏற்றணுமாம்!