குடும்ப தலைவிகளுக்கு சில பயனுள்ள டிப்ஸ்கள்... இதை மட்டும் செய்து பாருங்கள் உங்கள் சமையல் வேற லெவல்.!

குடும்ப தலைவிகளுக்கு சில பயனுள்ள டிப்ஸ்கள்... இதை மட்டும் செய்து பாருங்கள் உங்கள் சமையல் வேற லெவல்.!



Same samayal tips

குடும்ப தலைவிகள் தங்களது சமையல் வேற லெவலில் இருக்க உதவும் சில பயனுள்ள டிப்ஸ்களை இங்கு பார்க்கலாம்.

1. வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடனும், சுவையாகவும் இருக்கும். 

2. உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.

3. குழம்பு, பொரியல் செய்யும்போது உப்பு, காரம் அதிகமாகிவிட்டால் உலர்ந்த பிரெட் அல்லது ரஸ்கைப் பொடித்துத் தூவினால் சரியாகிவிடும்.

4. சப்பாத்தியோ, பூரியோ செய்யும்போது கோதுமை மாவில் சாதம் வடித்த நீர் சேர்த்து மாவை பிசைந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

5. சாதம் வடிக்கும்போது சற்று குழைந்து விட்டது போன்று தெரிந்தால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய்யைச் சேர்த்தால் மேலும் குழையாமல் இருக்கும்.

6. வெண்டைக்காயைப் பொரியல் செய்யும்போது புளித்த மோரைச் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும்.

7. காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.