இந்தியா வர்த்தகம் லைப் ஸ்டைல்

அறிமுகமானது ராயல் என்பீல்டின் குறைந்த விலை பைக்! முன்பதிவிற்கு முந்துங்கள்

Summary:

Royal Enfield new model bullet 350 released

அதிகமாக பைக் ஓட்ட விருப்பம் உள்ளவர்கள் பலரின் கனவு பைக் என்றால் அது ராயல் என்பீல்டாக தான் உள்ளது. ஆனால் அதன் விலையை கேட்டால் தான் பலருக்கும் தலை சுற்றிவிடுகிறது. 

இதற்கு காரணம் தற்போது சந்தையில் கிடைக்கும் ராயல் என்பீல்டு பைக் ஒன்றை வாங்க கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. இதனால் பலருக்கும் இது கனவாகவே இருந்து வருகிறது. 

இந்நிலையில் ராயல் என்பீல்டு பைக் நிறுவனம் புல்லட் 350 என்ற புதிய மாடல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் கிக் ஸ்டார்ட் வகை 1.12 லட்சத்திற்கும் எலக்ட்ரிக் ஸ்டார்க் 1.26 லட்சத்திற்கும் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த இரண்டு வகை மாடல்களும் 6 விதமான வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது. மற்ற மாடல் ராயல் என்பீல்டு பைக்குகளை விட இந்த புதிய மாடல்களின் விலை 8 முதல் 10 ஆயிரம் வரை குறைவாக உள்ளது. இந்த மாடலுக்கான முன்பதிவு தற்போது ஆரம்பமாகிவிட்டது. 5000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த மாத இறுதியில் பைக் டெலிவரி செய்யப்படுமாம். 


Advertisement