கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
மக்களே எச்சரிக்கை!! தெரியாம கூட இதை செய்யாதீங்க.! மீறினால் சிறுநீரகம் செயல் இழக்கும் அபாயம்..!

நம்முடைய சிறுநீரகம் தான் நமது உடலின் மிகப்பெரிய சுத்திகரிப்பு உறுப்பாகும். சிறுநீரகம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் தற்போதைய துரித உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் அநேக மக்கள் சிறுநீரக பாதிப்பை சந்திக்கின்றனர்.
சிறுநீரகங்கள் தான் உடலுக்கு தேவையான தாது உப்புக்கள், சத்துக்களை பிரித்து கழிவுகளை மட்டும் சிறுநீராக வெளியேற்றுகின்றது. ஒருவரின் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறவில்லை என்றால் அந்தக் கழிவுகள் ரத்தத்தில் கலந்து ஒவ்வொரு உறுப்பாக செயலிழக்கச் கூடும்.
முதலாவதாக அதிகப்படியான புரதத்தை உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். இரண்டாவதாக அதீத உப்பை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்த அழுத்தத்தை உண்டாக்கி சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும். மூன்றாவதாக அதிகப்படியான வலி வரும் போது அதனை தாங்கி கொள்ளாமல் அதற்கு மாத்திரை அதிகம் எடுத்துக்கொள்ளும் போது சிறுநீரகம் பாதிப்படைகிறது. நான்காவதாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதாலும் சிறுநீரகம் பாதிக்கப்படலாம்.
எனவே சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க சரியான உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். மேலும் நம் அன்றாட வாழ்வில் நம் உடலுக்கு தேவையான தண்ணீரை உட்கொண்டாலே சிறுநீரக பாதிப்பில் இருந்து நம் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.