வாடகைக்கு வீடெடுக்க காந்தியை வாடகை கணவராக்கிய நிலானி; வெளியான பரபரப்பு தகவல்.!!
நடிகை நிலானி காந்தி பெயரை பயன்படுத்தி வாடகைக்கு வீடு எடுக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சீரியல் நடிகை நிலானி தன்னை திருமணம் செய்து கொள்வதாக பழகி ஏமாற்றி விட்டார் என்று கூறி தற்கொலை செய்து கொண்டவர் லலித்குமார்.
இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்து மன உளைச்சலுக்கு உள்ளான நடிகை நிலானி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நடிகை நிலானி குறித்து காந்தி குடும்பத்தினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். அது குறித்து கருத்து தெரிவித்த நடிகை நிலானி.
என்னை பல்வேறு அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என பலரிடம் தொடர்பு இருப்பதாக விமர்சித்துள்ளார்கள் நான் அவ்வாறு இருந்திருந்தால் பணம் தான் எனக்கு முக்கியம் என்று பணத்தை கொடுத்துவிட்டு போய்க்கொண்டிருப்பேன் இந்த நிலையில் தற்பொழுது இருக்க மாட்டேன்.

இந்த சமூகத்தில் நடிகை என்றால் மிகவும் கீழ்த்தரமாக நடத்துகிறார்கள் நான் வாடகைக்கு வீடு எடுப்பதற்கு 30 வீடுகளுக்கு மேல் அலைந்து விட்டேன். கணவர் இல்லாமல் தனியாக இருப்பதால் யாரும் வீடு தர முன்வரவில்லை இந்த நிலையில் காந்தி தான் அதை உண்மையாக்கினார் என்று தெரிவித்துள்ளார்.