இது போன்ற கனவு வந்தால் உங்களுக்கு என்ன நடக்கும் தெரியுமா?.

Summary:

இது போன்ற கனவு வந்தால் உங்களுக்கு என்ன நடக்கும் தெரியுமா?.

பொதுவாக இரவில் தூங்கும்போது கனவு வருவது அனைவருக்கும் வழக்கமான ஒன்று. ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாச வித்தியாசமான கனவுகள் வரும். ஆனால் ஒருசில நபருக்கு கனவே வராமலும் இருக்கும்.

 ஒரு சிலருக்கு தூங்கும் போது, அவர்களை யாரோ துரத்துவது போல் கனவு வரும். அதற்கு காரணம் அவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சோர்வுடன் உள்ளார்கள் என அர்த்தம்.

ஒரு சிலருக்கு தூக்கத்தில், தான் மிகப்பெரிய பணக்காரர் ஆகவும். அவர்கள்  கார், பங்களா, ஆகியவற்றுடன் செல்வாக்காக  வாழ்வது போலவும் கனவு வரும். அப்படி கனவு வருபவர்கள், தன்னம்பிக்கை இல்லாதவர்கள் என கூறுகின்றனர். 

 இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசீர்வாதம்  எனக் கருத வேண்டும்.

ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் அதாவது விபத்தில் இறந்தவர்கள் அல்லது கொலை செய்யப்பட்டவர்கள் அல்லது தற்கொலை செய்து கொண்டவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும், உடல் நலம் குறையலாம்.  குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும்.
இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க, குலதெய்வக் கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருவது மிகவும் நல்லது. 


Advertisement