இட்லிக்கு அருமையான வேர்க்கடலை பொடி.. 5 நிமிடத்தில் செய்து அசத்துங்கள்.!

இட்லிக்கு அருமையான வேர்க்கடலை பொடி.. 5 நிமிடத்தில் செய்து அசத்துங்கள்.!


peanut-powder-recipe-for-idly

சுவையான வேர்க்கடலை பொடி வீட்டிலேயே எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றி தற்போது காண்போம்.

தேவையான பொருட்கள் :

வேர்க்கடலை -1/2 கப்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
கறிவேப்பிலை - 2 கொத்து
உளுந்து - 1/4 கப்
பூண்டு பல் - 3peanutசெய்முறை :

★முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் வரமிளகாய் போட்டு வறுத்து வேர்க்கடலை, கறிவேப்பிலை, உளுந்து ஆகியவற்றை நன்றாக வறுக்க வேண்டும்.

★பின் வேர்க்கடலையும், உளுந்தும் பொன்னிறமாக வரும் வரை நன்றாக வறுத்த பின் அடுப்பை அணைத்து ஆற வைக்க வேண்டும்.

★அடுத்து இவை அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு அதனுடன் சிறிதளவு உப்பு, பூண்டு பல் ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

★அவ்வளவுதான் சுவையான வேர்கடலை பொடி தயாராகிவிடும். அத்துடன் நல்லெண்ணெய் ஊற்றி, அதனுடன் இட்லி சேர்த்து சாப்பிட்டால் சுவை நாக்கிலேயே நிற்கும்.