சுவையான வெங்காய பொடி தோசை செய்வது எப்படி?.! 5 நிமிடத்தில் அசத்தலான ரெசிபி..! 

சுவையான வெங்காய பொடி தோசை செய்வது எப்படி?.! 5 நிமிடத்தில் அசத்தலான ரெசிபி..! 


onion-podi-dosa-recipe

சுவையான வெங்காய பொடி தோசை எப்படி செய்வது என்பது பற்றி தற்போது காண்போம்.

தேவையான பொருட்கள் :

இட்லி பொடி - தேவைக்கேற்ப 
வெங்காயம் - 1 
பச்சை மிளகாய் - 2 
எண்ணெய் - தேவைக்கேற்ப 
கொத்தமல்லி - சிறிதளவு 
தோசை மாவு - 1 கப்

செய்முறை :

★முதலில் பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

★பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தோசை மாவை ஊற்றி கலந்து வைத்த வெங்காய கலவையை அதன் மீது தூவி, இட்லி பொடி தூவி, எண்ணெய் ஊற்றி வேக வைக்க வேண்டும்.

★இறுதியாக தோசையை திருப்பி போட்டு வேகவைத்து பரிமாறினால் சூப்பரான வெங்காய பொடி தோசை தயாராகிவிடும்.