இட்லிக்கு அருமையான வெங்காய பூண்டு சட்னி...இன்றே செய்து அசத்துங்கள்..!

இட்லிக்கு அருமையான வெங்காய பூண்டு சட்னி...இன்றே செய்து அசத்துங்கள்..!


onion-garlic-chutney-recipe-for-dosa

இட்லி மற்றும் தோசைக்கு தொட்டு சாப்பிட அருமையான வெங்காய பூண்டு சட்னி எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றி தற்போது காண்போம்.

தேவையான பொருட்கள் :

எண்ணெய் - தேவைக்கேற்ப
உளுத்தம்பருப்பு, கடுகு - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப
பூண்டு - 2
சின்ன வெங்காயம் - 1 கப்
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

onion

செய்முறை :

★முதலில் வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்க வேண்டும்.

★பின் ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், வெங்காயம், பூண்டு தக்காளி ஆகியவற்றை பச்சை வாசனை போகும்வரை வதக்க வேண்டும்.

★அனைத்தும் வதங்கியதும் சிறிது நேரம் ஆற வைத்து மிக்ஸியில் போட்டு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.

★இறுதியாக கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்தால் தயாராகிவிடும்.