வாயில் எண்ணெய் ஊற்றி கொப்பளிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?.. தெரிஞ்சிக்கலாம் வாங்க..!!

வாயில் எண்ணெய் ஊற்றி கொப்பளிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?.. தெரிஞ்சிக்கலாம் வாங்க..!!



oil pulling benefits tamil

எண்ணெய் கொப்பளிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்.

அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களில் இருக்கும் சிறு சிறு துணுக்குகள் பற்களின் இடையில் சென்று படிந்துகொள்கிறது. இதில் சில பொருட்கள் பல்லின் பின்பகுதியில் கரையாக இருக்கும். அதில் சில நீரில் கரையக்கூடிய தன்மை கொண்டவை. சில கொழுப்பில் கரையும் தன்மை கொண்டவை. 

காரத்தன்மையுடன் காணப்படும் உமிழ்நீர் நமது மாறுபட்ட உணவுப்பழக்க வழக்கம் காரணமாக, அமிலத்தன்மையாக மாறி தொற்றையும் ஏற்படுத்தி விடுகிறது. நல்லெண்ணெய் மற்றும் மூலிகை குடிநீர் கொண்டு வாயை கொப்பளித்து வந்தால் உமிழ்நீரின் காரத்தன்மையானது பாதுகாக்கப்படும். மூலிகை, நல்லெண்ணையில் இருக்கும் மருத்துவ கூறு வாயில் இருக்கும் மென் திசுக்களின் மூலமாக உறிஞ்சப்பட்டு ரத்த ஓட்டத்தில் கலந்து நன்கு செயல்படும். 

நாளொன்றுக்கு 15 மில்லி நல்லெண்ணெய் வாயிலிட்டு பத்து நிமிடம் வாயை கொப்பளித்து, அதன் துப்புவிட்டால் வாயில் இருக்கும் அழுக்குகள், பல்லுக்கு இடையில் உள்ள உணவுத் துகள்கள் போன்றவை வெளியேறும். மேலும் தொண்டை வறட்சி, வாய்ப்புண், நாக்கு வறட்சி, நாக்கில் ஏற்படும் புண்கள், உமிழ்நீர் குறைவாக சுரப்பது போன்ற பிரச்சனையும் சரியாகும். 

மேலும், பல் ஈறுகளில் புண், ரத்தக்கசிவு, வாய் திசுகளில் ஏற்படும் புண், நாக்கு திசுக்களில், நாக்குகளில் ஏற்படும் புண் போன்றவற்றுக்கு திரிபுரா சூரணம் நல்ல பலனை தரும். திரிபுர சூரணத்தை 200 மில்லி நீரில் கலந்து சூடாக்கி, வடிகட்டி தேன் கலந்து வாய் கொப்பளித்தால் வாய், நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளில் இருக்கும் புண் சரியாகும். 

இதனை சரி செய்ய மஞ்சள் பொடி, சீரக பொடி போன்றவற்றையும் ஒரு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து 200 மில்லி நீரில் கலந்து கொதிக்க வைத்து தேன் கலந்து வாய் கொப்பளிக்கலாம். சைனஸ் பிரச்சனையால் ஏற்படும் மூக்கடைப்பு, தலைபாரம், பல் ஈறு, வீக்கம், தொண்டை வலி போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் லவங்கம், லவங்கப்பட்டை, மிளகு, சுக்கு, சீரகம், மஞ்சள் போன்றவற்றை நீரில் கலந்து கொதிக்க வைத்து வாய் கொப்புளித்து வரலாம்.