தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை தாக்கி நாடகமாடிய புது மணப்பெண்; சிக்கியது எப்படி..?

தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை தாக்கி நாடகமாடிய புது மணப்பெண்; சிக்கியது எப்படி..?


new married girl attacked husband with boy friend

சென்னை திருவான்மியூர் கடற்கரையில் தனது கணவருடன் சென்ற புதுமணப்பெண் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை தாக்கி நகையை கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் தர்கா சாலையைச் சேர்ந்த கதிரவன் என்பவருக்கும் அனிதா என்பவருக்கும் கடந்த 13 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கதிரவன் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 

new married girl attacked husband with boy friend

திருமணமான இளம் ஜோடிகள் சனிக்கிழமை காலை திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றனர். கடற்கரையில் ஒதுக்குப்புறமான இடத்தில் அவர்கள் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டினர். அனிதா அணிந்திருக்கும் நகைகளை தரும்படி மிரட்டினர். 

ஆனால் கதிரவன் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக போராடினார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் கதிரவனை இரும்பு கம்பியால் தாக்கி அவர்களிடம் இருந்த 12 பவுன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இந்த தாக்குதலில் கதிரவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தாக்குதலை தடுக்க முயன்ற அனிதாவுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. கதிரவன் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதுகுறித்த அவர்கள் அளித்த புகாரின் பேரில் திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 மர்மநபர்களையும் தேடி வந்தனர்.  கொள்ளை முயற்சியில் தாக்குதல் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.  சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை அடையாளம் காண முயன்றனர். 

new married girl attacked husband with boy friend

ஆனால் கதிரவனின் மனைவி அனிதாவின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் காணப்பட்டது. இதனால் சந்தேகமடையாக போலீசார் அனிதாவிடம் துருவி துருவி விசாரிக்க ஆரம்பித்தனர். அவ்வாறு  நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் தான் 
தன் ஆண் நண்பர் மூலம் கணவர் மீது தாக்குதல் நடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அனிதாவை போலீசார் கைது செய்தனர். அவரது ஆண் நண்பரும் சிக்கினார். இந்த சம்பவம் திருவான்மியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.