சூடான சுவையான நேந்திரம்பழ பஜ்ஜி செய்வது எப்படி?.! குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரெசிபி..!!

சூடான சுவையான நேந்திரம்பழ பஜ்ஜி செய்வது எப்படி?.! குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரெசிபி..!!



nenthiram-fruit-bajji-recipe

சுவையான நேந்திரம் பழம் பஜ்ஜி எப்படி செய்வது என்பது குறித்து இந்த செய்திக்ககுறிப்பில் காணலாம்.

தேவையான பொருட்கள் :

மைதா மாவு - அரைக்கப் 
உப்பு - 1 சிட்டிகை 
சர்க்கரை - 2 1/2 தேக்கரண்டி 
சமையல் சோடா - 2 சிட்டிகை 
நேந்திரம் பழம் - 1 
எண்ணெய் - தேவைக்கேற்ப

Lifestyle

செய்முறை :

★முதலில் நேந்திரம் பழத்தை தோல் நீக்கி வட்டமாக அல்லது நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும். 

★பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதாமாவை சேர்த்து அதனுடன் சர்க்கரை, சமையல் சோடா, தேவைக்கேற்ப தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும். 

★இறுதியாக வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும், நறுக்கி வைத்திருக்கும் நேந்திரம்பழ துண்டுகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு எடுத்தால் சுவையான நேந்திரம் பழம் பஜ்ஜி தயாராகிவிடும்.