ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் முருங்கைக்கீரை சூப்.. வீட்டிலேயே 10 நிமிடத்தில் செய்வது எப்படி?.!

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் முருங்கைக்கீரை சூப்.. வீட்டிலேயே 10 நிமிடத்தில் செய்வது எப்படி?.!



murungai-rasam-recipe

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் முருங்கைக்கீரை சூப் எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

தேவையான பொருட்கள் :

எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி  
தக்காளி - 1 
முருங்கைக்கீரை - கால் கப் 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
உப்பு - தேவைக்கேற்ப 
கருவேப்பிலை - 1 தேக்கரண்டி 
தனியா - 1 தேக்கரண்டி 
பூண்டு - 2 பல் 
பச்சை மிளகாய் - 1 
வெந்தயம் - அரை தேக்கரண்டி 
சீரகம் - அரை கரண்டி 
கடுகு - 1 தேக்கரண்டி 
எண்ணெய் - தேவைக்கேற்ப 
காய்ந்த மிளகாய் - 1 
கட்டி பெருங்காயம் - தேவைக்கேற்ப

செய்முறை :

★முதலில் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 

★பின் கீரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு எடுக்க வேண்டும். 

★அடுத்து பூண்டு, கருவேப்பிலை, தனியா, பச்சை மிளகாய் மற்றும் சீரகம், வெந்தயம் ஆகியவற்றை நீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.

★ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கட்டி பெருங்காயம்  சேர்த்து தாளித்து அதில் அரைத்த விழுது மற்றும் நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும். 

★தக்காளி வதங்கிய பின் முருங்கை கீரையை வேகவைத்த நீருடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இறுதியாக இறக்கும்போது எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கினால் முருங்கைக்கீரை ரசம் தயாராகிவிடும்.