இந்த குரங்குக்கு இருக்குற அறிவை பாருங்க..! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!Monkey trying to save water from leaked pipe viral video

அடைக்கப்படாத குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீரை குரங்கு ஓன்று தனது கைகளால் அடைக்க முயற்சிக்கும் காட்சி வீடியோவாக வெளியாகி வைரலாகிவருகிறது.

9 வினாடிகள் ஓடும் இந்த வீடீயோவை இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அடைக்கப்படாமல் இருக்கும் குழாய் ஒன்றில் இருந்து வெளியேறும் தண்ணீரை, அங்கிருக்கும் குரங்கு ஓன்று அங்கு கிடக்கும் இலைகளை கொண்டும், தனது கைகளை கொண்டும் அடைக்க முயற்சிக்கிறது.

கோடைகாலம் நெருங்கிவரும் நிலையில், தண்ணீரின் அருமை குறித்து விளக்கும் விதமாக இந்த வீடியோ காட்சி அமைந்திருப்பதாக பலரும் தங்கள் கருத்தை தெரிவித்துவருகிற்றனர். இதோ அந்த வீடியோ.