லைப் ஸ்டைல்

இந்த குரங்குகள் மனிதர்களுக்கு ஏதோ சொல்ல வருகிறது..! நெட்டிசன்களின் மனம் கவர்ந்த வீடியோ காட்சி..

Summary:

குரங்கு கூட்டம் ஒன்று தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வீடியோ காட்சி ஒன்று இணையத்த

குரங்கு கூட்டம் ஒன்று தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

வளர்ந்துவரும் நாகரீக உலகில் பல குடும்பங்களில், குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து பேசுவதற்கோ, சாப்பிடுவதற்கு கூட நேரம் கிடைக்காமல் போய்விடுகிறது. வேலை, பணம் என்ற பெயரில் மனிதர்கள் பல்வேறு சந்தோசங்களை இழந்து வருகின்றனர். இந்நிலையில் மனிதர்களுக்கு முன் உதாரணமாக, குரங்கு குடும்பம் ஒன்று தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வீடியோ காட்சி பார்போபரை பரவசப்படுத்திக்கிறது.

இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுசந்தா நந்தா அவர்கள் வெளியிட்டுள்ள இந்த 26 வினாடிகள் காணொளியில், தாய் குரங்கு ஒன்று தனது இரண்டு குட்டிகளுக்கும் பால் கொடுத்தவாறு அமர்ந்துள்ளது. அந்த குட்டிகளும் தனது தாயுடன் விளையாடிக்கொண்டே பால் அருந்துகிறது.

அப்போது அங்கு வரும் தந்தை குரங்கு, தன் குட்டிக்குரங்குக்கு பேன் பார்க்கிறது. தொடர்ந்து தன் மனைவி குரங்கிற்கும் பேன் பார்த்து தனது அன்பைக் காட்டுகிறது. குடும்பத்தோடு அந்த குரங்கு காட்டும் நெருக்கம் மனிதர்களுக்கும் ஏதோ செய்தி சொல்வது போலவே உள்ளது.


Advertisement