பால் குடிப்பதால் முகத்தின் அழகும் மேம்படுமா?.. அசத்தல் தகவல் இதோ.!

பால் குடிப்பதால் முகத்தின் அழகும் மேம்படுமா?.. அசத்தல் தகவல் இதோ.!



Milk Drinking Habit Beauty of Face

 

தினமும் நாம் டீ குடிப்பதற்கு பதில் பால் குடிக்கலாம். அதில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலுசேர்க்கும். 

அதேபோல, சருமத்திற்கும் நன்மை பயக்கும். பாலில் இருக்கும் கால்சியம், வைட்டமின் சருமத்தின் அழகை அதிகரிக்க உதவி செய்யும்.

பாலில் இருக்கும் ரெட்டினோல் வைட்டமின் ஏ-வின் வடிவமாகும். இது விரைவில் வயதாகும் அறிகுறிகளை எதிர்க்கும் தன்மை கொண்டது. 

மேலும், சரும செல்கள் சேதம் அடைவதை தடுக்கும். இது இயற்கையான பிரகாசத்தை கொடுக்கும். 

முகப்பரு சார்ந்த பிரச்சனை கொண்டவர்கள் பால் மற்றும் பால் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். 

ஏனெனில் பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள், ஹார்மோனை தூண்டி அது முகப்பருவுக்கு வழிவகை செய்யும் என்று கூறப்படுகிறது.