பறவைகளை துன்புறுத்தி வீடியோ எடுக்கும் இளசுகள்.. ரீல்ஸ் மோகத்தால் சர்ச்சை செயல்?..!men-helping-bird-video-fraud

ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்திற்கு பின் தான் செய்த உதவியை மறைத்து வாழ்ந்த நாட்கள் மலையேறி, வாட்சப்பில் ஸ்டேட்டஸ் வைத்து வருகின்றனர். 

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உட்பட பல பக்கங்களில் பறவைகள், மனிதர்கள், விலங்குகளுக்கு உதவி செய்வது போல பல வீடியோ வைரலாகி வருகிறது. இவற்றில் சில உண்மையில் நடக்கிறது. எஞ்சியவை சித்தரிக்கப்படுகிறது. 

சமீபகாலமாகவே பறவைகளை பிடித்து, அவை ஏதேனும் பிரச்சனையில் சிக்கிக்கொண்டபின், அதனை சம்பந்தப்பட்டவர் விடுவிப்பது போல வீடியோ வைரலாகி வருகிறது. 

இந்நிலையில், தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், இளைஞர் தேன்சிட்டு குருவியை பலாப்பழத்தில் சிக்கிக்கொண்டு காப்பாற்றியதுபோல வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வரவேற்பை பெற்றது. 

ஆனால், வீடியோவில் இளைஞரின் செயல்பாடுகளை கண்டித்துள்ள நபர்கள், தேன்சிட்டு மலர்களில் உள்ள தேனை மட்டுமே சாப்பிடும். அது பலாப்பழத்தில் எப்படி சிக்கும்? அதேபோல, தேன்சிட்டு குருவியின் அலகு பலாப்பழத்தில் இவ்வுளவு ஆழமாக பதிய வாய்ப்பில்லை என கூறுகின்றனர். 

இதனை வைத்து கவனிக்கும்போது, தங்களின் விடியோவை வைரலாக மாற்ற எப்படியெல்லாம் முயற்சிக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. அந்த வீடியோ உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.