நெஞ்சு சளிக்கு ஒரு மணி நேரத்தில் பலன் தரும் பாட்டி வைத்தியம்.!

நெஞ்சு சளிக்கு ஒரு மணி நேரத்தில் பலன் தரும் பாட்டி வைத்தியம்.!



medicine-for-cold

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நெஞ்சு சளியால் பாதிக்கப்படுகின்றனர். சாதாரணமான சளி பிரச்சனை என்றால் ஒரு வாரத்திற்குள் தானாகவே சரியாகி விடும். ஆனால் நெஞ்சு சளி என்றால், அது குணமாக நீண்ட காலமாகும்.

Cold

நெஞ்சு சளி இருந்தால் மூச்சு விடுவதில் கூட சிரமம் ஏற்படும். உணவு உண்பதிலும், பேசுவதிலும் கூட சிரமம் ஏற்படும். இப்படிப்பட்ட நெஞ்சு சளியை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே குணப்படுத்த முடியும். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

1) அடுப்பில் ஒரு கனமான கரண்டியை வைத்து அதில் தேங்காய் எண்ணையை ஊற்றவும். அதை மிதமான சூட்டில் வைத்து, பிறகு 2,3 கற்பூரம் சேர்த்து கரைத்து, மிதமான சூட்டில் இதை நெஞ்சின் மேல் தடவ வேண்டும். இதனால் நெஞ்சு சளி பாதிப்பு உடனடியாக சரியாகிவிடும்.

Cold

2) 5,6 புதினா இலைகளை சுத்தம் செய்து, அதோடு 3,4 மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வரவேண்டும். 3) கால் டம்ளர் பெரு நெல்லிச்சாறுடன் சிறிது தேன் மற்றும் 4 இடித்த கருப்பு மிளகு பருகினால் நெஞ்சு சளி மற்றும் இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் விரைவில் சரியாகிவிடும் .