வாந்தி எடுக்க வைத்த தேவையானி.. படத்திற்காக சரத்குமார் செய்த அதிர்ச்சி செயல்.! விக்ரமன் நெகிழ்ச்சி.!
திருமணபந்தம் குதூகலமாக அமைய பின்பற்ற வேண்டியவை.? என்னென்ன தெரியுமா..
திருமண உறவு சரியாக அமைந்தது அது அவ்வாறே சரியான பாதையில் செல்ல வேண்டுமாயின், உறவில் உள்ள ஆண், பெண் இருவரும் புரிதலுடன் பயணிப்பவர்கள் எனில் அந்த உறவு சிறக்கும் ,மேலும் தங்களுடைய தொழில் அல்லது பணியில் சிறந்து விளங்குவர், அவ்வாறு திருமண வாழ்வு சிறக்க தம்பதிகள் கடைபிடிக்க வேண்டிய சில விசயங்கள்...
உறவில் முதலில் தனது இணையருக்கு மதிப்பளித்து இருவரும் நடக்க வேண்டும். தேவைகள் மற்றும் விருப்பங்களை அவரவர் விருப்பம் போல் தேர்ந்தெடுக்க அனுமதிக்க வேண்டும், பிறரை சுட்டிக்காட்டியோ அல்லது அவர்கள் செயலைக்குறிப்பிட்டோ காட்டக்கூடாது. இவ்வாறு நடப்பதன் மூலம் இருவருக்கும் இடையே புரிந்து நடந்து கொள்ள இயலும்.
ஏதாவது சண்டை ஏற்படும்போது முதலில் இருவரில் யாரவது ஒருவர் விட்டுக் கொடுத்து அமைதியாக இருக்க வேண்டும். அமைதியான சூழலில் அதை பேசி தீர்க்க வேண்டும். உறவில் எப்போதும் விட்டு கொடுத்து செல்வது அவசியம், அது பிரச்சினையை இன்னும் பெரிதாக்காது
உறவில் எப்போதும் நம்பிக்கையுடன் இருப்பது அவசியமாகும், அது காதலும் அன்னியத்தையும் அதிகரிக்கச் செய்யும் உறவில் எப்போதும் மகிழ்ச்சியான சூழல் உருவாகும் மேலும் சில சிறு விஷயங்களில் கூட இணையரை எப்போதும் பாராட்ட வேண்டும் , இந்தச் செயல் இந்த உறவை இன்னும் பலமாக வெளிப்படுத்தும்.