மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் கடுகு.. வேறு என்னென்ன நோய்களை தீர்க்கும் தெரியுமா.!?

மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் கடுகு.. வேறு என்னென்ன நோய்களை தீர்க்கும் தெரியுமா.!?



many-disease-cured-by-eating-mustard-seeds

பொதுவாக நாம் வீட்டில் உள்ள சமையல் பொருட்களில் பல வகையான மருத்துவ குணங்கள் உள்ளன என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இதன்படி நாம் தாளிக்க பயன்படுத்தும் கடுகில் பல நோய்களை தீர்க்கும் அதிசய மருத்துவ பண்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. கடுகு சாப்பிடுவதால் என்னென்ன நோய்களை குணப்படுத்த முடியும், எப்படி பயன்படுத்தலாம் என்பதை இப்படி விளக்கமாக பார்க்கலாம்?

cancer

1. கடுகில் அதிக அளவு என்சைம்கள் நிறைந்துள்ளதால், நாம் உண்ணும் உணவை எளிதாக செரிமானம் செய்வதற்கு உதவுகிறது.
2. வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
3. கடுகில் ஆன்ட்டி அல்சர் பண்புகள் நிறைந்துள்ளதால் வயிற்றுப்புண், நெஞ்செரிச்சல் போன்ற நோய்களை குணப்படுத்தும்.
4. குறிப்பாக புற்றுநோய் செல்கள் உடலில் வளர்வதை முற்றிலுமாக நீக்குகிறது.
5. கடுகில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி இதயத்தை பாதுகாப்பதோடு மாரடைப்பு, நெஞ்சு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
6. கடுகில் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நிறைந்துள்ளதால் பாக்டீரியா தாக்குதல்களான சளி, இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.

cancer

இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய கடுகை கடையில் வறுத்து பொடி செய்து சுடு தண்ணீரில் கலந்து குடித்து வரலாம். அல்லது கடுகு பொடியை கருப்பட்டி சேர்த்து உருண்டை செய்து தினமும் ஒரு உருண்டையாக எடுத்துக் கொள்ளலாம்.