லைப் ஸ்டைல்

பெற்றோர்கள் எதிர்ப்பு; பேஸ்புக் ஆதரவு; வினோத முறையில் திருமணம் செய்த காதல் ஜோடி.!

Summary:

love couple telecaste their marriage in facebook live

இன்று நமது அன்றாட வாழ்வில் சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு மிகவும் அதிகமாகிவிட்டது. வெறும் பொழுதுபோக்காக பயன்படுத்த ஆரம்பித்த பேஸ்புக் வலைத்தளம் தற்பொழுது திருமணங்களின் சாட்சிகளாய் மாறியுள்ளது. 

பெங்களூரை சேர்ந்த இளம் காதல்ஜோடி ஒன்று தங்களது காதலை பெற்றோர்கள் ஏற்க மறுத்ததால் அவர்களை எதிர்த்து பேஸ்புக் நேரலையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். 

பெங்களூரை சேர்ந்தவர் கிரண்குமார். இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கிரண்குமார், இரண்டாம் ஆண்டு பிபிஏ படிக்கும் அஞ்சனா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கிரண்குமார் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்  அஞ்சனாவின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மதுரகிரி தொகுதியில் முக்கிய பதவியில் இருக்கும் அஞ்சனாவின் தந்தை கிரண்குமாரை மிரட்டி எச்சரித்துள்ளார்.

எனவே பெற்றோர்கள் தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அஞ்சனா வீட்டை விட்டு வெளியேறினார். மேலும் கிரண்குமாரும், அஞ்சனாவும் ஹெசரகட்டா பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் தங்களது நண்பர்களின் உதவியுடன் திருமணம் செய்து கொண்டு அதனை பேஸ்புக்கில்  நேரலையாக ஒளிபரப்பியுள்ளனர்.

மேலும் அஞ்சனா திருமணத்திற்கான வயதை எட்டியுள்ளதால், இருவரின் சம்மதத்துடன் தான் திருமணம் நடைபெற்றது என்பதை போல் வாக்குமூலம் கொடுத்து வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர்.
இதற்கு அவர்களது நண்பர்கள் பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

https://www.facebook.com/kiran.watson1/posts/1644967485612766

 


Advertisement