இறப்புக்குப் பிறகான வாழ்க்கை.! முன்னோர்களை நினைவுபடுத்தும் கல்லறை திருவிழா.!

இறப்புக்குப் பிறகான வாழ்க்கை.! முன்னோர்களை நினைவுபடுத்தும் கல்லறை திருவிழா.!



Life after death. Cemetery festival to remember the ancestors

உலகத்தில் பல்வேறு நாடுகளில் கிறிஸ்துவ மதம் பறந்து விரிந்து கிடக்கிறது. கருணை, அன்பு உள்ளிட்ட இரண்டையும் மையமாக கொண்டு, கிறிஸ்தவ மதம் உலகெங்கிலும் பரப்பப்பட்டது. இப்பூவுலகில் வாழும் வாழ்க்கைக்கு பிறகும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று ஆத்மாவை தூய்மையாக்கும் ஒரு மதமாக கிறிஸ்துவ மதம் கருதப்படுகின்றது. இந்த மதத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் விதமாக, கத்தோலிக்க கிறிஸ்துவர்களால், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 2ம் தேதி கல்லறை திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த கிறிஸ்துவ மதத்தில் பிறந்து, மக்களோடு, மக்களாக, வாழ்ந்து கருணை அன்பு உள்ளிட்டவற்றை மற்றவர்களுக்கு வழங்கி, உயிரிழந்து பிறகு மீண்டும் உயிர்த்தெழுந்தவர் இயேசு.

Lifeகிறிஸ்துவ மதத்தில் உடலை விட்டு உயிர் பிரிவது ஒரு முடிவே கிடையாது, அது ஒரு தொடக்கமாகவே கருதப்படுகிறது. உடலை விட்டு உயிர் பிரிந்தாலும் ஆன்மாவுக்கு என்றுமே அழிவில்லை என்பதை உணர்த்தும் விதமாக, ஆன்மாவை தூய்மை படுத்துவதற்காக ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆகவே கல்லறை திருநாள் எனப்படும் இந்த நாளில் உலகம் முழுவதும் இறந்தவர்களுக்கு ஜெபம் செய்து மாபெரும் விழாவாக கொண்டாடப்படுகின்றது.

Lifeஇந்நாளில் இறந்தவர்களின் கல்லறைக்கு சென்று, கல்லறையை சுத்தம் செய்து, மலர்கள் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபம் செய்வதை கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் வழக்கமாக கடைபிடித்து வருகிறார்கள். உடலளவில் எங்களை விட்டு நீங்கள் பிரிந்திருந்தாலும், எங்கள் உள்ளத்தில் எப்போதும்  வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என தங்களுடைய முன்னோர்களை நினைவு கூறும் விதமாகவே, இந்த கல்லறை திருநாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.