"உடல் ஆரோக்கியத்திற்கு பேருதவி செய்யும் பெருங்காயம்!" எப்படி தெரியுமா.?
இந்தியாவில் முக்கியமாக சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான் பெருங்காயம். இது ஆயுர்வேதத்தில் சிறந்த ஆன்டி ஆக்சிடெண்டாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான மருத்துவப் பண்புகள் உள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு பெருங்காய நீர் ஒரு மாமருந்து.

மேலும் இந்த பெருங்காய நீர் எடை குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இது செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கல் மற்றும் வாய்வு பிரச்சனைகளைத் தீர்க்கிறது. மேலும் பெருங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
தலைவலிக்கு பெருங்காயப் பற்று ஒரு சிறந்த தீர்வாகும். பெருங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அதை நெற்றியில் பற்று போட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம் ஆகிய பிரச்சனைக்கும் பெருங்காயம் ஒரு சிறந்த தீர்வாகும்.

இதற்கு கடுகு எண்ணையுடன் சிறிது பெருங்காயப்பொடி சேர்த்து தொப்புளை சுற்றி தடவிவர உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் பெருங்காயம் தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும், தொற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.