Breaking: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.. 5 பேர் பரிதாப பலி.. சிவகாசியில் மீண்டும் சோகம்.!



In virudhunagar sivakasi fire accident 5 died

விருதுநகரில் பட்டாசு ஆலை வெடித்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்ன காமன்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. வழக்கம்போல இன்று காலை தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென பட்டாசுகள் வெடித்துச்சிதறி பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டாசு ஆலை வெடித்து சோகம் :

இந்த சம்பவத்தில் இதுவரை 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், பலர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. . இதனிடையே பட்டாசுகளும் தொடர்ந்து வெடித்து சிதறுவதால், முதலில் தீயை அணைத்துவிட்டு பின் மீட்கும் பணிகள் நடைபெறுகின்றன. மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயரலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இதையும் படிங்க: ஷாக் நியூஸ்! சென்னையில் swiggy, zomato உணவு டெலிவரிக்கு தடை! காரணம் என்ன? அதிர்ச்சியில் பொதுமக்கள்...

வெடிவிபத்து குறித்த வீடியோ :

வீடியோ நன்றி : CNNnews18

இதையும் படிங்க: சமையல் எரிவாயு விலை குறைவு: மாதம் முதல்நாளே மகிழ்ச்சி செய்தி..!