லைப் ஸ்டைல் சமூகம்

தொடர்ந்து போனில் பேசிய மனைவி! ஆத்திரமடைந்த கணவர்; இறுதியில் நடந்த கொடூரம்

Summary:

husband killed wife for talking in phone

தெலுங்கானாவில் தொடர்ந்து போனில் பேசிக் கொண்டிருந்த மனைவியை கணவர் சுத்தியலால் அடித்துக் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் வய்ரா அருகே சத்திரம் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா. இவருக்கும் பத்மா(30) என்ற பெண்ணுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீபகாலமாக இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

கணவரின் தொல்லை தாங்க முடியாமல் பத்மா இரண்டு மாதங்களுக்கு முன்பு தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன் பிறகு கிருஷ்ணா தன்னையும், குழந்தைகளையும் கவனித்து கொள்ள மிகவும் சிரமப்பட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரிடம் மனைவியை அழைத்து வர யோசனை கூறியுள்ளனர்.

இதையடுத்து இரண்டு தினங்களுக்கு முன்பு கிருஷ்ணா தன் மனைவி பத்மாவை மாமியார் வீட்டிற்கு சென்று சமாதானம் பேசி மீண்டும் அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்த பத்மா கணவன் மற்றும் குழந்தைகளை சரியாக கவனிக்காமல் தொடர்ந்து மொபைல் போனில் பேசிய வன்னமே இருந்துள்ளார். இவ்வாறு நேற்று வெகுநேரம் மனைவி பத்மா போனில் பேசிக்கொண்டிருப்பதை கண்டு ஆத்திரமடைந்த கிருஷ்ணா அது குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பத்மா எந்தவித தெளிவான பதிலும் அளிக்காததால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா மனைவிக்கு வேறு யாருடனாவது தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அருகிலிருந்த சுத்தியலை எடுத்து தலையிலே பயங்கரமாக தாகியுள்ளார். இதனால் பத்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அதன் பின் கிருஷ்ணாவும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். இந்த சம்பவம் பற்றி அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தங்கள் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கிருஷ்ணாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement