பிரேக்கப் உணர்வு வாட்டி வதைக்கிறதா.? காதல் முறிவிலிருந்து மீள நிபுணர்கள் தரும் அருமையான டிப்ஸ்.! 

பிரேக்கப் உணர்வு வாட்டி வதைக்கிறதா.? காதல் முறிவிலிருந்து மீள நிபுணர்கள் தரும் அருமையான டிப்ஸ்.! 



how to recover out future from break up

மிக நெருங்கிய ஒருவரின் மரணமோ அல்லது உறவு முறிவோ அவர்களது பிரிவோ உங்களை மிகவும் வாட்டி வதைத்து அவதிப்படுகிறீர்களா? இது உங்களுக்கு மட்டுமான பிரச்சனை இல்லை. இது உலகில் இருக்கும் பல்வேறு தரப்பினரும் அனுபவிக்கும் ஒரு பிரச்சனை தான் என்பதை முதலில் உணர வேண்டும். இந்த உறவு முறிவு காயத்திலிருந்து வெளியேற கால அவகாசம் தேவைப்படும். பல கடினமான நேரங்களை கடக்க வேண்டி இருக்கும். 

இவ்வாறு பிரேக்கப் ஏற்படும் போது அதிக வலி ஏற்பட்டு இருக்கும். இதனால் வெறுமை, சோகம், வருத்தம், கண்ணீர், தூக்கமின்மை, பசியின்மை, சோர்வு, தலைவலி உள்ளிட்ட உடல் ரீதியான பிரச்சனைகளையும் எதிர்கொண்டு இருப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து விலகி இருப்பீர்கள். உங்களது பொறுப்புகளில் இருந்து விலகி தனிமையில் இருப்பீர்கள். மீண்டும், மீண்டும் உங்களுக்கு நடந்த மோசமான அனுபவத்தை நினைத்து நினைத்து வருந்தி கொண்டே இருப்பீர்கள். 

Love

இது குறித்து நிபுணர்கள் நிறைய தீர்வுகளை சொல்கிறார்கள். இது ஒரு பிரச்சனை தான். ஆனால், இது உங்களுக்கு மட்டுமே இருக்கும் பிரச்சனை அல்ல என்பதை உணர வேண்டும். தியானம் செய்து மன அமைதியை மேம்படுத்த வேண்டும். உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தும் வகையில், இந்த தியானம் உங்களுக்கு உதவும். பயம் மற்றும் பதற்றத்தையும் இது குறைக்கும். சுய ஓய்வு, உள அமைதி உள்ளிட்டவை தியானம் மூலம் உங்களுக்கு கிடைக்கும். 

நாம் மேற்கொள்ளும் தியானம் நமது வாழ்க்கைக்கு வழிகாட்டும். இதயம் நொறுங்கிப் போன நிலையில் கடந்த காலத்தை எண்ணி வருந்தி கொண்டிருப்பதால், எதிர்காலத்திற்கு எந்த பிரயோஜனமும் இல்லை. ஆனால், அது எதிர்காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் மீதான சுய அன்பு, அக்கறை உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்களது சிறு சிறு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். 

அதுதான் உங்கள் கடந்த கால மோசமான அனுபவத்தில் இருந்து வெளிவர உதவும். இவ்வாறு மனதிற்கு பிடித்த செயல்களை மேற்கொள்ளும் போது உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். அது மட்டும் அல்லாமல், உடற்பயிற்சி மற்றும் டயட் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு, உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் டைவர்ஷன் ஏற்பட்டு பழைய பிரச்சனைகளை மறக்க வழிவகை ஏற்படும். உங்களுக்கான சுய விருப்பங்கள் மற்றும் ஆர்வங்கள் உள்ளிட்டவற்றை மீட்டெடுத்து அவற்றின் மீது கவனம் செலுத்தி பொழுதை போக்கிங்கள். 

Love

மேலும் இது போன்ற மனமுறிவு ஏற்படும் போது உங்கள் மீது உங்களுக்கே மிகுந்த வெறுப்பும், கோபமும் இருக்கும். தவறு செய்து விட்டதாக நினைத்து குற்ற உணர்வுக்கு ஆளாக கூடும். அந்த நேரத்தில் உங்களை நீங்களே மன்னித்து விடுங்கள். எல்லோரும் தவறு செய்பவர்கள் தான் என்பதை உணர்ந்து உங்களை மன்னித்து அந்த காயத்தில் இருந்து மீண்டு வர முயலுங்கள். வலியுடன் அழுது கொண்டே காலத்தை கடப்பதால் எந்த பயனும் இல்லை. உங்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களிடம் உங்கள் கவலைகளை கொட்டி தீர்க்கும் போது அது உங்கள் மனதில் இருக்கும் பாரத்தை குறைக்கிறது. 

இதுபோன்ற நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் அவர்களை நினைத்து பெருமை கொள்ளுங்கள். அவர்களுக்கு நன்றி கூறுங்கள். அந்த உறவு முறிவுனால் உங்களுக்கு ஏற்பட்ட இழப்பீடுகள் குறித்து யோசித்து கவலைப்படாமல், அதில் இருக்கும் நன்மைகள் மற்றும் அந்த உறவு முடிந்ததால் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் வித்தியாசமான, மகிழ்ச்சியான உணர்வுகள் சுதந்திரம் குறித்து நினைத்து பெருமை கொள்ளுங்கள். இது உங்கள் எதிர்காலத்தில் மகிழ்ச்சியை கொடுக்கும். வாழ்த்துக்கள்.