சளி, இருமல் தொல்லையை ஒழித்துக்கட்டும் வெற்றிலை சட்னி செய்வது எப்படி?.!

சளி, இருமல் தொல்லையை ஒழித்துக்கட்டும் வெற்றிலை சட்னி செய்வது எப்படி?.!



How to Prepare Vetrilai Chutney 

 

கோடை முடிந்து பனிக்காலம் மழைக்காலம் தொடங்கி விட்டாலே பலருக்கும் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளும் அடுத்தடுத்து ஏற்படும். 

பருவ காலத்தில் ஏற்படும் இந்த பிரச்சனைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, நோயை அண்ட விடாமல் பாதுகாக்கிறது. வெற்றிலையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அல்சர், அஜீரணம், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் என பல பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. 

குழந்தைகள் வெற்றிலை சாப்பிடக்கூடாது என பெரியவர்கள் இயல்பாக சொல்லி வந்தாலும், பச்சை வெற்றிலை சுவை பிடிக்காதவர்கள் அதனை சட்னி போல தயார் செய்து சாப்பிடலாம். 

இதனால் சளி பிரச்சனை நீங்கும், உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கும். வெற்றிலையில் சட்னி செய்வது குறித்து இன்று காணலாம். 

வெற்றிலை 1 கையளவு எடுத்து, 3 சிறிய கரண்டி அளவு தலா மிளகு மற்றும் சீரகத்தை வானெலியில் இட்டு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

பின் இதனோடு தேங்காய், பொட்டுக்கடலை, வெற்றிலை, மிளகாய், உப்பு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

இறுதியில் கடுகு உளுந்து தாளித்து பரிமாறினால் சுவையான வெற்றிலை சட்னி தயார். வெற்றிலையை வதக்கியும் சட்னி அரைத்து சாப்பிடலாம். அளவுடன் வெற்றிலை சட்னியை சாப்பிடுவது சாலச்சிறந்தது.