சரும பிரச்சனைகளை சரிசெய்யும் சுவையான புதினா டீ.. மருந்தும், மருத்துவமும்.!

சரும பிரச்சனைகளை சரிசெய்யும் சுவையான புதினா டீ.. மருந்தும், மருத்துவமும்.!


how-to-prepare-puthina-tea-tamil

நாம் தினமும் புதினா டீ குடித்து வந்தால், சரும பாதிப்புகளை வெகுவாக குறைக்கலாம். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளும் வெளியேற்றப்பட்டு, உடல் நலமும் பாதுகாக்கப்படும். 

தேவையான பொருட்கள்:

புதினா இலை - 7,
தேயிலை - ஒரு கரண்டி,
பனங்கற்கண்டு அல்லது தேன் - ஒரு கரண்டி,
பால் - கால் கிளாஸ்.

Kitchen Tips

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட புதினா இலையை ஒரு கிளாஸ் நீர் சேர்த்து, தேயிலை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். இந்த நீர் பாதியளவு சுண்டியதும், அதனை வடிகட்டி பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து பருகலாம். 

விருப்பம் உள்ளவர்கள் பால் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம். புதினா டீயை பொறுத்த வரையில், அதில் பால் சேர்க்காமல் குடிப்பது நல்லது. கருப்பட்டியும் விருப்பப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.