10 நிமிடத்தில் சுவையான வெங்காயம் முட்டை மசாலா.. வீட்டிலேயே செய்வது எப்படி?..!!
தோசை, நாண், சப்பாத்தி போன்றவற்றுக்கு தொட்டுக்கொள்ள ருசியான வெங்காயம் முட்டை மசாலா செய்வது எப்படி என்று காணலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை வறுப்பதற்கு :
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள், மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
வேகவைத்த முட்டை - பத்து
மசாலாவுக்கு :
வெங்காயம் - ஐந்து
பச்சை மிளகாய் - 5
இஞ்சி, பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - மூன்று தேக்கரண்டி
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
சீரகத்தூள், மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை :
★முதலில் எடுத்துக்கொண்ட வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடிபொடியாக நறுக்கிகொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானபின்னர் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலந்துவைக்க வேண்டும்.
★அதில் வேகவைத்த முட்டை சேர்த்து மூன்று நிமிடம் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
★பின்னர் மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி, பூண்டு விழுதையும் பச்சை வாசனை போகும்வரை வதக்க வேண்டும்.
★இறுதியாக மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்தூள், தனியாதூள், சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வேகவைத்த பின்னர் கரம்மசாலா மற்றும் மிளகுத்தூள் சேர்த்து முட்டைகளை கலந்து கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் வெங்காயம் முட்டை மசாலா தயார்.