உடலுக்கு நன்மைகளை தரும் கறிவேப்பில்லை ரசம்; வீட்டிலேயே செய்வது எப்படி?.!

உடலுக்கு நன்மைகளை தரும் கறிவேப்பில்லை ரசம்; வீட்டிலேயே செய்வது எப்படி?.!



how-to-prepare-karivepillai-rasam

 

கறிவேப்பிலையில் உடலுக்கு பல நன்மைகளை வழங்கும் மருத்துவ குணங்கள் உள்ளன. கருவேப்பில்லை இரத்தத்தின் வெள்ளை அணுக்களை பலப்படுத்தும். இன்று கறிவேப்பிலையில் ரசம் செய்வது எப்படி என தெரிந்துகொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: 

கறிவேப்பில்லை - ஒரு கிண்ணம் அளவு,
துவரம் பருப்பு  - 3 கரண்டி,
மிளகு & சீரகம் - தலா 1 கரண்டி,
புளி - சிறிதளவு,
மஞ்சள் தூள் - தேவையான அளவு,
நெய் - சிறிதளவு,
கடுகு & உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட கறிவேப்பில்லை, மிளகு, சீரகம், துவரம்பருப்பு ஆகியவற்றை விழுதுபோல அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். புளியில் நீர் ஊற்றி, அதனை கரைசலாக வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த கரைசலை அடுப்பில் வைத்து மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிட்டு, உப்பு மற்றும் அரைத்த விழுது ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இவை இரண்டு நிமிடம் கொதித்தது வந்ததும், நெய்யில் கடுகு சேர்த்து தாளித்து இறக்க கறிவேப்பில்லை ரசம் தயார். இதனை சூப் போல பருகினால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.