இட்லி மீந்துருச்சா?.. இனி சுடசுட இத செஞ்சு அசத்துங்க..! சூப்பர் ரெசிபி..!!

இட்லி மீந்துருச்சா?.. இனி சுடசுட இத செஞ்சு அசத்துங்க..! சூப்பர் ரெசிபி..!!



How to Prepare Idly Upma

மீந்துபோன இட்லியை வைத்து ருசியான இட்லி உப்புமா எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

எப்பொழுதும் உப்புமாவே செய்து கொடுப்பதால் வீட்டில் சாப்பிடுவதற்கு தயங்குவர். இனி ரவாவை விட்டு இட்லியில் உப்புமா செய்வது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

இட்லி - 7
வேர்க்கடலை - சிறிதளவு 
முந்திரி - 10 
பச்சை மிளகாய் - 3 
உளுந்து - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி 
கடுகு - 1/2 அரை தேக்கரண்டி 
சின்ன வெங்காயம் - 50 கிராம் 
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி 
உப்பு - தேவைக்கேற்ப 
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி 
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி கொத்தமல்லி தழை - சிறிதளவு கருவேப்பிலை - சிறிதளவு

Idly Upma

செய்முறை :

★முதலில் இட்லியை நன்கு உதிரி உதிரியாக உதிர்த்து வைக்க வேண்டும்.

★பின் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

★அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலை பருப்பு, உளுந்து போட்டு தாளித்து வேர்கடலை, முந்திரி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். 

★பின் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் சற்று வதங்கிய பின் சாம்பார் பொடி மற்றும் மிளகுப்பொடி சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

★இறுதியாக உதிர்த்து வைத்த இட்லியை சேர்த்து கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுட சுட தயாராகிவிடும்.