நாவை நாட்டியமாடசெய்யும் சுவையான சிக்கன் ஊறுகாய் வீட்டிலேயே செய்வது எப்படி?..!



how to prepare chicken pickle

தொன்றுதொட்ட காலம் முதலாகவே ஊறுகாய் என்பது நமது உணவுமுறையில் தவிர்க்க இயலாத இடத்தை பிடித்துவிட்டது. எலுமிச்சை, பூண்டு, மாங்காய், நார்த்தங்காய் ஊறுகாய் பலருக்கும் பிடித்த ஒன்றாகும். இதில், சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி என இன்று காணலாம். 

தேவையான பொருட்கள்:

பொறிக்க:
எலும்பு நீக்கப்பட்ட கோழிக்கறி - 500 கி,
மஞ்சள் தூள் - அரை கரண்டி,
மிளகாய் தூள் - 1 கரண்டி, 
இஞ்சி பூண்டு விழுது - 1 கரண்டி, 
எண்ணெய் - தேவையான அளவு,

மசாலாவுக்கு:
எண்ணெய் - 2 கரண்டி,
இஞ்சி பூண்டு விழுது - 2 கரண்டி,
மஞ்சள் தூள் - கால் கரண்டி,
மிளகுக்காய்த்தூள் - கால் கரண்டி,
வெந்தயத்தூள் - கால் கரண்டி,
எலுமிச்சை பழம் - அரைமூடி

தாளிக்க:
எண்ணெய் - 2 கரண்டி,
வெந்தயம் - 1 கரண்டி,
காய்ந்த மிளகாய் - 5,
கருவேப்பில்லை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 

முதலில் எடுத்துக்கொண்ட கறிக்கோழியை சுத்தம் செய்து மஞ்சள் தூள், மிளகாய்தூள், இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும். பின் வானலியில் பொறிக்க தேவையான எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். 

ஊறவைத்த கோழியை எண்ணெயில் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்க வேண்டும். வானலியில் மசாலாவுக்கு தேவையான எண்ணேய் சேர்த்து இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்க வேண்டும். பின் இதனுடன் மஞ்சள் தூள், மிளககாய்தூள், கடுகுத்தூள் மற்றும் வெந்தயத்தை சேர்த்து வதக்க வேண்டும். 

இறுதியாக கறிவேப்பில்லை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கினால் கலவை தயாராகிவிடும். இக்கலவையை நாம் முதலில் வறுத்து வைத்த சிக்கனுடன் சேர்த்து கிளறினால் சிக்கன் ஊறுகாய் தயார்.