ரசாயனம் சேர்த்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை எவ்வாறு கண்டறியலாம்.!?



How to know artificially ripened mango

கோடை காலம் வந்து விட்டாலே மாம்பழ சீசனும் வந்துவிடும். கோடை காலத்தில் தான் சுவையான மாம்பழ வகைகள் அதிகமாக கிடைக்கும். மாம்பழ சீசன் வந்துவிட்டாலும் மக்களின் தேவைக்கேற்ப மாம்பழங்கள் அதிகமாக கிடைக்காத காரணத்தினால் பல இடங்களில் செயற்கையாக இரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்று வருகின்றனர். இதனால் உடலுக்கு பல பாதிப்பை ஏற்படுத்துகிறது.

Mango

செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் 

மக்களைப் பொறுத்தவரை பழங்களின் தேவை அதிகமாக இருப்பதால் பழங்களை கால்சியம் கார்பைடு என்ற சுண்ணாம்பு கல்லால் பழுக்க வைக்கின்றனர். குறிப்பாக தற்போது உள்ள மாம்பழ சீசனில் மாம்பழங்கள் விரைவாக பழுக்க வேண்டும் என்பதற்காக சுண்ணாம்புக் கல்லால் செயற்கையாக பழுக்க வைக்கின்றனர். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் சாப்பிட்டாலும் உடலுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க: மாம்பழத்தை தண்ணீரில் ஊறவைத்து தான் சாப்பிடனும்.. ஏன் தெரியுமா.?!

கால்சியம் கார்பைட் சுண்ணாம்பு கல்லால் ஏற்படும் பாதிப்புகள்
இந்த சுண்ணாம்பு கல்லால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடும் போது உடலில் புற்று நோயை ஏற்படுத்தும் செல்கள் உருவாகின்றன. இதுபோக வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாய்ப்புண், அல்சர், நிரந்தர கண் பாதிப்பு, தோல் பாதிப்பு போன்ற பல வகையான நோய்கள் ஏற்படுகின்றன.

Mango

செயற்கையாக பழுக்கவைத்த மாம்பழத்தை எவ்வாறு கண்டறியலாம்?

1. செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் முழுவதுமாக ஒரே நிறத்தில் இருக்கும். ஆனால் இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பச்சையும், மஞ்சளும் கலந்து நிறத்தில் இருக்கும்.
2. செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தில் இரசாயன வாடை இருக்கும். இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாபளத்தில் இனிப்பு மற்றும் பழத்தின் வாசனை இருக்கும்.
3. மாம்பழத்தின் வெளிப்புறப் பக்கங்களில் ஏதேனும் அடிபட்டது போல் இருந்தால் அதை வாங்கக்கூடாது. இது சுண்ணாம்பு கல்லினால் ஏற்பட்ட சேதாரம் ஆகும்.
4. மாம்பழங்களை ஒரு பக்கெட் தண்ணீரில் போடும்போது அது உள்ளே மூழ்கினால் இயற்கையாக பழுக்க வைக்கப்பட்டது என்றும், மிதந்தால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் என்றும் அர்த்தம்.

இதையும் படிங்க: மாங்காயை சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியா.?! குளிர வைக்கும் உணவுகள் இதோ.!