பளிச்சிடும், மென்மையான சருமம் பெற வேண்டுமா ? இதோ எளிய டிப்ஸ்.

 பளிச்சிடும், மென்மையான சருமம் பெற வேண்டுமா ? இதோ எளிய டிப்ஸ்.


how to get clean face

கோடைக்காலத்தில் அனைவரையும் பெரிதும் பாதிக்கக்கூடியது சருமம். சூரிய ஒளிக்கதிர்கள் சருமத்தில் விழும்போது, நிறங்கள் மாறுகின்றன.   
குறிப்பாக பச்சை பால், அழகான பளிச்சிடும், மென்மையான உடல் சருமத்திற்கு பல பயன்பாடுகளை கொண்டுள்ளது. 

face

 காய்ச்சாத பால், சிறந்த ஆண்டி-டானிங் குணமுடையது. வெயில் பட்ட மேனிக்கு, கரு நிறத்தை போக்கக்கூடியது. காய்ச்சாத பால், தக்காளி சாறு ஆகியவற்றை சேர்த்து உபயோகித்து வந்தால், முகம் பளிச்சிடும் .

பாதாம் - 6, பேரிச்சம்பழம் - 6 இவற்றை காய்ச்சாத பாலில் ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். பிறகு, பாலில் உள்ள பொருட்களை அரைக்க வேண்டும். முகம், கழுத்து பகுதிகளில் தேய்த்துவிட்டு 15 முதல் 20 நிமிடங்கள் ஊற விடவும். முகத்தை தண்ணீரில் நனைத்தப்படி, 2-3 நிமிடங்களுக்கு அதே கலவையை கொண்டு தேய்க்க வேண்டும். சுத்தமான நீரினால் முகம், கழுத்து பகுதிகளை கழுவ வேண்டும்.

face
 
 பச்சை பால், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க கூடியது. அபத்தான யூவி கதிர்களில் இருந்து முகத்தை காக்க கூடியது. அதுமட்டுமின்றி மிருதுவான சருமத்திற்கு காய்ச்சாத பால் பயன்படுகிறது. 
காய்ச்சாத பாலுடன் பயத்தம் பருப்பு சேர்த்து அரைத்து வைக்க வேண்டும். முகத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் விடவும். 4-5 நிமிடங்களுக்கு தேய்த்த பின் முகத்தை கழுவ வேண்டும்.  

இந்த இயற்கை முறைகள் மூலம், பளிச்சிடும், மென்மையான சருமம் பெறலாம்.