லைப் ஸ்டைல்

முட்டை கெட்டுவிட்டதா இல்லையா என எப்படி கண்டறிவது? இதை படிங்க!

Summary:

How to find good or bad eggs

பொதுவாக கெட்டுப்போன முட்டையை கண்டறிவது சற்று கடினம்தான். காய்கறி, இறைச்சி போன்றவற்றை பார்க்கும்போது அல்லது அதன் வாடையை வைத்தோ அது நல்லதா இல்லை கேட்டுவிட்டதா என கண்டறியமுடியும்.

ஆனால் முட்டை உள்ளே கெட்டுப்போயிருந்தாலும் வெளியில் எந்தவிதமான மாற்றங்களும் தெரிவதில்லை. ஆனால் ஒருசில அறிகுறிகளை வைத்து முட்டை நன்றாக உள்ளதா அல்லது கெட்டுவிட்டதா என கண்டறிய முடியும்.
 

வழிமுறை 1

முட்டையின் அளவை விட இரண்டுமடங்கு ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் முட்டையை போடவும். அவ்வாறு போடப்பட்ட முட்டையானது நீரின் அடியிலோ அல்லது பக்கவாட்டிற்கோ சென்றால் அந்த முட்டை நன்றாக உள்ளது என்று அர்த்தம். ஒருவேளை முட்டை நீரில் மிதந்தாள் முட்டை கெட்டுவிட்டது என்று அர்த்தம்.

  

வழிமுறை 2

முட்டையை உடைத்து பயன்படுத்துபவராக இருந்தால் முட்டையை உடைத்தபிறகு முட்டையின் வெள்ளைக்கரு வெள்ளையாக இருந்தால் அது நன்றாக உளது என்று அர்த்தம். ஒருவேளை வெள்ளை கருவின் நிறத்தில் மாற்றங்கள் தெரிந்தால் முட்டை கெட்டுவிட்டது என்று அர்த்தம்.

  

வழிமுறை 3
முட்டையை காதின் அருகில் வைத்து ஆட்டி பார்க்கவும். அவ்வாறு செய்யும்போது சலசலவென்று சத்தம் கேட்டால் முட்டை முற்றிலும் கெட்டுவிட்டது என்று அர்த்தம்.
  

வழிமுறை 4
உடைத்த முட்டையின் மஞ்சள் கரு வட்ட வடிவில் இல்லாமல் கலங்கியோ அல்லது சிதறியோ இருந்தால் முட்டை கெட்டுவிட்டதாய் அர்த்தம்.

இதை உங்கள் நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்து அவர்களுக்கும் உதவுங்கள்.


Advertisement