BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
ஆண்களே.. பெண்களுக்கு பிடித்த மாதிரி நடக்க என்னனென்ன பண்ணனும் தெரியுமா.?
குடும்பத்தில் பெரும்பாலும் சண்டைகள் வருவதற்கு தவறான புரிதலே காரணமாக அமைகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள் இருந்து வரும். அவற்றை கணவன் மனைவிக்குள் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் பெரும்பாலும் சண்டைகள் வராது.

கணவன், மனைவி என்பதை விட ஆண்கள், பெண்களை புரிந்து கொள்ள மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் பெண்கள், ஆண்களிடம் இருக்கும் சில பழக்க வழக்கங்களை வைத்து சண்டை போடுகின்றனர்.
பெண்களுக்கு பிடித்த மாதிரி ஒரு சில செயல்களை செய்வதன் மூலம் அவர்களை ஈஸியாக புரிந்து கொள்ளலாம். மேலும் பிடித்தமான ஆணாகவும் மாறலாம். அவை என்னவெல்லாம் தெரியுமா.

முதலில் பெண்களை எப்போதும் அவமரியாதையுடன் நடத்தக் கூடாது. மேலும் சண்டை போடுவதை விட அமைதியாக உட்கார்ந்து பேசுவதால் பல தவறான புரிதல்கள் நீங்கும். பேசுவதை காது கொடுத்து கேட்க வேண்டும் என்பது தான் பெண்களுக்கு மிகப்பெரிய குறையாக உள்ளது. இவற்றையெல்லாம் செய்வதன் மூலம் பெண்களுக்கு பிடித்தமான ஆணாக மாறலாம்.